dinamalar telegram
Advertisement

காங்., நிர்வாகிகள் நியமனம் தாமதம் பதவியை எதிர்பார்ப்போர் ஏமாற்றம்

Share
பெங்களூரு:கர்நாடக மாநிலத்தின், காங்., மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும்படி, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதால், நிர்வாகிகள் நியமனம் தாமதமாகிறது. பதவி எதிர்பார்ப்போர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கர்நாடக காங்., கமிட்டி நிர்வாகிகள் இடம், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், காங்., தோல்விக்கு பொறுப்பேற்று, அன்றைய மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், பதவியை ராஜினாமா செய்தார்.தலைவர், செயல் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொண்டு, கமிட்டி கலைக்கப்பட்டது. மாநில தலைவராக சிவகுமார், பொறுப்பேற்ற பின், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து, கட்சியை பலப்படுத்த திட்டமிட்டார்.

வெறும் விசிட்டிங் கார்டு நிர்வாகிகளாக இருக்காமல், கட்சிக்காக உழைப்பவர்களை நிர்வாகிகளாக்க விரும்பினார். நிர்வாகிகளாக பலரும், 'லாபி' நடத்தினர்.எந்த நெருக்கடிக்கும் பணியாத சிவகுமார், மாவட்ட சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி, நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் ஈடுபட்டிருந்தார்.மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தனக்கு நெருக்கமானவர்களை, நிர்வாகிகளாக்கும் முயற்சியில் இறங்கினார்.
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, தயாராக வேண்டி உள்ளதால், நிர்வாகிகளை நியமிக்கும்படி, நெருக்கடி எழுந்தது.இதற்கிடையில் அடுத்த முதல்வர் குறித்து, காங்கிரசில், சர்ச்சை எழுந்தது. இத்தகைய சர்ச்சையால், கட்சியின் இமேஜ் பாதிக்கும் என்பதை உணர்ந்த, காங்., மேலிட தலைவர் ராகுல், டில்லிக்கு வரும்படி சிவகுமார், சித்தராமையாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்படி சில நாட்களுக்கு முன், இவ்விரு தலைவர்களும், டில்லிக்கு சென்றனர். கர்நாடக காங்., கமிட்டி நிர்வாகிகள் நியமனத்துக்கு, தனித்தனி பட்டியல் கொண்டு சென்றனர்.இந்த பட்டியல்களுக்கு, அனுமதியளிக்காக கட்சி மேலிடம், மாநிலத்தின் மூத்த தலைவர்களுடன், ஆலோசனை நடத்தி ஒரே பட்டியலுடன் வரும்படி உத்தரவிட்டது. அடுத்த முதல்வர் பற்றி சர்ச்சை எழாமல், தொண்டர்களின் வாய்க்கு பூட்டு போடும்படியும் அறிவுறுத்தியது.

இதனால் சித்தராமையாவும், சிவகுமாரும் வெறும் கையுடன் திரும்பினர். அவர்கள் டில்லியிலிருந்து திரும்பியதும், நிர்வாகிகளாகலாம் என, எதிர்ப்பார்ப்பில் இருந்தோரும் ஏமாற்றமடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement