dinamalar telegram
Advertisement

முதல்வர் எடியூரப்பா மாற்றம் பற்றிய பேச்சு கட்சிக்கு பாதிப்பு என ராகவேந்திரா கவலை

Share
ஷிவமொகா:''கர்நாடகாவில், முதல்வர் மாற்றம் என்பது, வெறும் யூகம். இது போன்று சிலரின் பேச்சால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கட்சி மேலிடம் அனைத்தையும் சரி செய்யும்,'' என, முதல்வரின் மகனும், பா.ஜ., -- எம்.பி.,யுமான ராகவேந்திரா தெரிவித்தார்.

ஷிவமொகாவில், அவர் கூறியதாவது:மாநிலத்தில் முதல்வர் மாற்றம் என்பது, வெறும் யூகம். எடியூரப்பா பா.ஜ.,வை, அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தியவர். சிலரின் தேவையற்ற பேச்சால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.அனைத்து சமுதாயத்தின் மடாதிபதிகளும், எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ளனர். முதல்வர் எடியூரப்பா, தன் பிள்ளைகளுக்காக கட்சி மேலிடத்திடம், நிபந்தனை விதித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாவதை நான் கவனித்தேன்.

முதல்வர் எடியூரப்பா, தம், 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், லட்சக்கணக்கான தொண்டர்களை, கட்சிக்கு காணிக்கையாக அளித்துள்ளார்; பல தலைவர்களை வளர்த்துள்ளார்; கட்சிக்கு சக்தியூட்டியுள்ளார்.அவர் எப்போதும், தன் பிள்ளைகள், குடும்பத்தை பற்றி யோசித்தவர் இல்லை. விஜயேந்திராவை அமைச்சராக்க, ராகவேந்திராவுக்கு பதவி கொடுக்க, நெருக்கடி தருவதாக கூறப்படுவது பொய்.

முதல்வரை மாற்ற, கட்சி மேலிடம் ஆலோசிக்கவில்லை. வரும் நாட்களில், எடியூரப்பா இன்னும் நல்லாட்சி அளிப்பார்.சுவாமிகளின் ஆசியால் வளர்ந்தவர். அபிவிருத்தி பற்றி விவாதிப்பதற்காக, முதல்வரின் வீட்டுக்கு மடாதிபதிகள் வந்தனர். இதில் சிறப்பேதும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement