dinamalar telegram
Advertisement

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: நவீனுக்கு சிறுநீரக பழுது

Share
பெங்களூரு:பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதாகியுள்ள நவீனுக்கு சிறுநீரக பழுது ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகரில், தன் வீட்டு வாசலில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 2017 செப்டம்பர் 5ல், மர்ம கும்பலால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கொலை தொடர்பாக, நவீன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவீன், உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டதால், விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, சிறுநீரகம பழுது பட்டுள்ளது தெரிந்தது. அவரை மருத்துவமனையின் சிறை வார்டில் சேர்த்து, சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர் சிகிச்சை பெரும் வார்டு அருகில், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement