dinamalar telegram
Advertisement

நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது; மூவருக்கு வலை

Share
ஓசூர்: தளி அருகே, நாட்டுத்துப்பாக்கி தயாரித்த மூன்று பேரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த உனிசிநத்தத்தில் உள்ள நஞ்சாச்சாரி என்பவரது மாட்டு கொட்டகையில், நாட்டுத்துப்பாக்கி தயார் செய்து விற்பதாக, அப்பகுதி வி.ஏ.ஓ., மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. அவரது புகாரின்படி, தளி போலீசார் அங்கு சென்றனர். அங்கிருந்த கும்பலில மூன்று பேர் தப்பியோடிய நிலையில், மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், நஞ்சாச்சாரி மகன் லோகேஷ், 38, மற்றும் கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த காவேரிபுரத்தை சேர்ந்த வெங்கடராஜ், 45, தளியை சேர்ந்த இம்ரான், 34, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், நாட்டுத்துப்பாக்கி செய்ய தேவையான பொருட்கள், மூன்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடி தலைமறைவாக உள்ள நஞ்சாச்சாரி, 79, நெல்லுமாரை சேர்ந்த உபேந்திரா, 25, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்லை சேர்ந்த ஜெயராம், 35, ஆகியோரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement