dinamalar telegram
Advertisement

அன்று போராட்டம்; இன்று கண்டுகொள்வாரில்லை: கரூரில் பராமரிப்பற்ற புதிய காந்தி சிலை வளாகம்

Share
கரூர்: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், புதிய காந்தி சிலை முட்புதரிடையே, புதர் மண்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில், 1952ல் தேச தந்தை காந்திக்கு இரண்டரை அடி சிலை வைக்கப்பட்டது. சிலை பராமரிப்பின்றி உள்ளதால், கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், புதிதாக, எட்டு அடி உயரம் கொண்ட வெண்கல சிலை அமைத்து பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என, கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்., 18 இரவு புதிய காந்தி சிலையை அமைக்க, பழைய சிலை அகற்றப்பட்டு, நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையறிந்த, கரூர் காங்., -எம்.பி., ஜோதிமணி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பழைய காந்தி சிலையை அகற்றியதை கண்டித்தும், பழைய கல்வெட்டுகளை மீண்டும் வைக்க வேண்டும் என, தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், புதிய பிரமாண்டமான காந்தி சிலை அமைக்கப்பட்டு, கடந்த பிப்., 21ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்ட காந்தி சிலையை சுற்றி, வண்ணமயமான நீரூற்றுகள், விளக்குகள், புல்வெளி அமைக்கப்பட்டது. தற்போது, புதிய காந்தி சிலை வளாகம் பராமரிப்பின்றி, மரங்கள், புல் வெளி கருகிய நிலையில் புதர்மண்டியுள்ளது. மேலும், நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட, பழைய காந்தி சிலையும் திறந்த வெளியில், கேட்பாரற்றுள்ளது. புதிய காந்தி சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த காங்., மற்றும் தி.மு.க.,வினர் பழைய சிலையை கூட கண்டுகொள்ளவில்லை என, புகார் எழுந்துள்ளது. வரும் ஆகஸ்ட், 15ல் சுதந்திர தின கொண்டாடப்பட உள்ள நிலையில், தேசத்தந்தை காந்தியின் புதிய சிலையையும், பழைய காந்தி சிலையையும், பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement