dinamalar telegram
Advertisement

கழுத்தறுத்து தாய் கொலை: மகன் கைது

Share
குளித்தலை: குளித்தலை அருகே, தாயின் கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., கணக்கபிள்ளையூரை சேர்ந்தவர் முருகாயி, 70. மூத்த மகன் வெங்கடாசலம், 50. இளையமகன் பொன்னுசாமி, 40; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று இரவு, 7:00 மணியளவில் தன் தாயாருடன் வீட்டில் பேசிக்கொண்டு இருந்த போது, பொன்னுசாமி திடீரென கத்தியால் தாயின் கழுத்தறுத்து கொலை செய்தார். குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனர். விசாரணையில், பொன்னுசாமி மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார் எனவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தன் அண்ணன் வெங்கடாசலத்தை கழுத்தில் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. பொன்னுசாமிக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement