dinamalar telegram
Advertisement

மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Share
புன்செய்புளியம்பட்டி: திம்பம் மலைப்பாதையில், இரும்பு துகள் ஏற்றிச்சென்ற லாரி, கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
கோவையில் இருந்து இரும்பு துகள் பாரம் ஏற்றிய, 12 சக்கர லாரி, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு, திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்த சங்கீதராஜ், 31, ஓட்டினார். நேற்று மதியம், 21வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததால் மலைப்பாதையின் இருபுறமும், மற்ற சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, லாரியை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே, மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement