dinamalar telegram
Advertisement

மாஜி எம்.பி., - தி.மு.க.,வில் ஐக்கியம்; காலியாகும் அ.தி.மு.க., கூடாரம்

Share
ஈரோடு: ஈரோடு மாவட்ட, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் பிற நிர்வாகிகள், தி.மு.க.,வுக்கு தாவுவதால், அ.தி.மு.க., கூடாரம் காலியாகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் இருந்த, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, இவரது மனைவியும், மாவட்ட பஞ்., தலைவியுமான நவமணி, கோபி நகர செயலாளர் காளியப்பன் உட்பட பல ஒன்றிய, நகர நிர்வாகிகள், தி.மு.க.,வுக்கு சென்றனர். அடுத்து, பெருந்துறை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அம்மாபேட்டை ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளர் சரவணபவா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., சென்றனர். தற்போது முன்னாள் எம்.பி., என்.ஆர்.கோவிந்தராஜர், அம்மாபேட்டை யூனியன் தலைவர் விஜயநிர்மலா, பஞ்., தலைவர்கள் விஜயராமு, வெள்ளையம்மாள் என பலரும், தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் முத்துசாமி, நல்லசிவம் முன்னிலையில் ஐக்கியமாகி உள்ளனர். இச்சூழலில் செப்.,க்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து பணி செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement