dinamalar telegram
Advertisement

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 20 பேர் கைது

Share
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி போலீசார், நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஏழு பேரை கைது செய்துள்ளனர். இதன்படி, பெரியநாகதோணையை சேர்ந்த அருண்குமார், 22, கடூரை சேர்ந்த சின்னசாமி, 42, கோபி, 22, ஆண்டியப்பன், 37, முனியப்பன், 47, கோவிந்தன், 27, பாவடரப்பட்டியை சேர்ந்த சின்ராஜ், 58, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார், மேலூரை சேர்ந்த ராமகிருஷ்ணா, 40, தோட்டிகுப்பத்தை சேர்ந்த நாராயணப்பா, 35, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம், ஒன்பது நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரு நாட்களில் மட்டும், நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பு, மருந்து சப்ளையர் உட்பட மொத்தம், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.* அரூர் அடுத்த பெரியப்பட்டி வனப்பகுதியில், கல்லாற்றின் அருகில் புதரில் கிடந்த நாட்டுத்துப்பாக்கியை, கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


* தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி நான்கு ரோட்டில் இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், எஸ்.ஐ., வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். அந்த வழியாக பல்சர் வண்டியில் வந்தவரை சோதனை செய்தபோது, நாட்டு துப்பாக்கி கொண்டு சென்றது தெரிந்தது. விசாரணையில், அவர் தேன்கனிக்கோட்டை அடுத்த கடூரை சேர்ந்த சங்கர், 33, அவரது தந்தை எல்லப்பன், 69, என்பதும், இருவரும் வீட்டில் நாட்டுத்துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்ததும் தெரிந்தது. விசாரணையில், மாரண்டஹள்ளியை சேர்ந்த ரஜினி, 41, சீரியம்பட்டியை சேர்ந்த சக்திவேல், 40, கிருஷ்ணன், 52, கரகூரை சேர்ந்த முல்லேசன், 26, மல்லப்பன், 50, அன்பு, 32, சொக்கன், 45, உள்ளிட்ட, 11 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்து அவர்களிடமிருந்த, 11 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement