dinamalar telegram
Advertisement

பெய்த தூரல் மழையால் விவசாயிகள் ஏமாற்றம்

Share
ஓசூர்: ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில், நேற்று தூரல் மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 17ல் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சூளகிரியில், 96 மி.மீ., மழை பதிவானது. மைதாண்டப்பள்ளி, கூட்டூரில், நான்கு ஓட்டு வீடுகள் சேதமாகின. ராயக்கோட்டையில், வீடு இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். மாவட்டத்தில் அதன் பின் மழை பதிவாகவில்லை. இந்நிலையில், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டையில், நேற்று தூரல் மழை பெய்தது. அதனால், வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. காற்றில் ஈரப்பதம் அதிகமிருந்ததால், வாகனத்தில் செல்லும்போது, அதிகளவு குளிரை உணர முடிந்தது. கனமழை பெய்யும் என, காலை முதல் காத்திருந்த விவசாயிகள் மற்றும் மக்களுக்கு, நேற்று மாலை வரை ஏமாற்றமே மிஞ்சியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement