dinamalar telegram
Advertisement

குடியிருப்பு பகுதியில் குவிந்துள்ள பறிமுதல் வாகனங்களால் மக்கள் அவதி

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் உள்ளது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் ரேஷன் பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட, 500க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து அலுவலகம் அமைந்துள்ள பெத்தனப்பள்ளி, பாரீஸ்நகர் குடியிருப்பு, தண்டேகுப்பம், பாறையூர் செல்லும் வழி மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தியுள்ளனர். இதில் பல வாகனங்கள் திருடப்பட்டும், துருப்பிடித்தும், புதர் மண்டி விஷப்பூச்சிகள், பாம்புகளின் கூடாரமாக மாறி வருவதாகவும், சாலையில் நடமாட அச்சமாக இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேபோல, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. இங்கு வருவாய்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, மணல், கிரானைட் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பெரும்பாலும் பழுதடைந்தவையாகவே இருக்கும். ஆனால், இதற்கு அதிகளவில் அபராதம் விதிப்பதால் யாரும் மீட்பதற்கு வருவதில்லை. மேலும் மதுவிலக்கு பிரிவினர், அவ்வப்போது வாகனங்களை ஏலம் விடுவது போல், இந்த வாகனங்களையும் ஏலம் விடுவதற்கோ, உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கோ கலெக்டர், டி.ஆர்.ஓ., நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, குடியிருப்பு பகுதிகளிலுள்ள வாகனங்களை அகற்ற முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement