dinamalar telegram
Advertisement

சிறுமி தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை

Share
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வீரமலையை சேர்ந்தவர் பிரேம்குமார், 21; டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், சூளகிரி அடுத்த அஞ்சலகிரியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணமானது. ஆனால் சிறுமி, அஞ்சலகிரி கிராமத்திலுள்ள இளைஞர் சசிகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர், அவசரகதியில் சிறுமியை பிரேம்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில், சிறுமிக்கு விருப்பமில்லாத நிலையில், தொடர்ந்து நான்கு மாதங்களாக பிரேம்குமாருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், புடவையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்படி வந்த நாகரசம்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆனநிலையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement