dinamalar telegram
Advertisement

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக சரிவு

Share
ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த இரு அணைகளில் இருந்து, நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 10 ஆயிரத்து, 853 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, 6,599 கன அடியாக குறைக்கப்பட்டது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 13 ஆயிரம் கன அடியாகவும், மாலை, 6:00 மணிக்கு, 12 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது. இருப்பினும் நீர்வரத்து, 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் வருவதால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement