dinamalar telegram
Advertisement

நிமோனியா தடுப்பூசி திட்டம்: ஆலோசனை கூட்டம்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி (நிமோனியா) திட்டம் குறித்து மாவட்ட பணிக்குழு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தடுப்பூசி திட்டத்தில், ஆண்டுதோறும், 28 ஆயிரத்து, 284 குழந்தைகள் பயனடைய உள்ளனர்,'' என்றார். நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement