dinamalar telegram
Advertisement

மீன் வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மீன் வளத்துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள ஒரு மீன் வள உதவியாளர் பணி இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. கடந்த, 2021 ஜூலை, 1 அன்று, 18 வயது மேற்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 35 வயது, பி.சி., எம்.பி.சி., 32 வயது, ஓ.சி., 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி, ராமசாமி கவுண்டர் தெருவிலுள்ள தர்மபுரி மீன் வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், கல்வி சான்றிதழ் நகல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வயது சான்றிதழ் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன், விண்ணப்பங்களை, மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 1/165 ராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தர்மபுரி- 636705, என்ற முகவரிக்கு வரும், 5ல் மாலை, 4:00 மணிக்கு கிடைக்கும் வகையில், நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement