dinamalar telegram
Advertisement

விபத்தை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், சட்ட ஒழுங்கை மேலும் சீராக்க பாதுகாப்பு அதிகம் தேவைப்படும் பகுதிகளில், போலீசார் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட சாலைகளில் உள்ள சேதப்பகுதி, இயங்காமலுள்ள சிக்னல்களை விரைந்து சீரமைக்க வேண்டும். அதிக பாரம், உயரமான லோடுகளுடன் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். தொப்பூர் கணவாயில் விபத்தை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை பணி செய்வதுடன், வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணி தொய்வின்றி நடக்க வேண்டும். தொடர்ந்து வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், பெரும்பாலான தவறுகள் வாகன ஓட்டிகளால் நடந்து வருகிறது. இதை தடுக்க, பொதுமக்களிடம், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், எஸ்.பி., கலைச்செல்வன், டி.ஆர்.ஓ., அனிதா, உதவி கலெக்டர் சித்ரா, ஆர்.டி.ஓ., தாமோதரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement