dinamalar telegram
Advertisement

வளர்பிறை பிரதோஷம்; நந்திக்கு சிறப்பு பூஜை

Share
தர்மபுரி: வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் மஹாலிங்கேஸ்வரருக்கு, பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.* அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், நந்திக்கும் பால், இளநீர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாசல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement