dinamalar telegram
Advertisement

கணவனால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., அலுவலகத்தில் மனு

Share
தர்மபுரி: கணவனால் பாதிக்கப்பட்ட, தர்மபுரியை சேர்ந்த சத்யபிரியா என்ற மாற்றுத்திறனாளி பெண் தன், இரு குழந்தைகளுடன், தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: பாப்பாரப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமாருக்கும், எனக்கும் கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணமானது. அவர் என் பெற்றோர் வீட்டில் என்னுடன் குடும்பம் நடத்தினார். எங்கள் பகுதி அருகே உள்ள ஒருவரின் செப்டிக் டேங்க் வாகனத்தில் கிளீனராக பணியாற்றினார். எங்களுக்கு, ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. இதுவரை, குடும்ப செலவுக்கு அவர் பணம் கொடுத்ததில்லை. அடிக்கடி குடித்து விட்டு, வரதட்சணை கேட்டு என்னை தாக்கி வந்தார். மேலும், என் பெற்றோரின் இரண்டு லட்ச ரூபாய் சீட்டை கடந்த, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எடுத்து சென்று விட்டார். இதுகுறித்து, சதீஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement