dinamalar telegram
Advertisement

நிலையான கரும்பு சாகுபடி; ஆன்லைன் பயிற்சி வகுப்பு

Share
அரூர்: அரூரில், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு ஆன்லைன் பயிற்சி நடந்தது. அரூர், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா, 2021-22ம் ஆண்டிற்கான, மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு, அரூர் வேளாண் உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் ஜெயபாலன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய தொழில்நுட்பங்கள், அதன் பயன்கள் மற்றும் கூடுதல் மகசூல் பெறுவது குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், வீரதளபதி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சி வகுப்பில் வேளாண் அலுவலர் சுதா மற்றும், 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement