dinamalar telegram
Advertisement

சர்வீஸ் சாலை அமைப்பதில் தாமதம்: 4 ரோட்டில் வாகன ஓட்டிகள் அவதி

Share
சேலம்: நான்கு ரோட்டில் சர்வீஸ் சாலை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 420 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. கட்டி முடித்து ஓராண்டுக்கு மேலாகியும், நான்கு ரோடு பகுதியில் இருந்து, புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி, கட்டடங்களை அகற்றுவதில் உள்ள பிரச்னையில் இழுபறி உள்ளது. தற்போது சாலை அமைக்க, ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், அந்த வழியே இருசக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அரிசிபாளையம் பிரதான சாலை வழியே வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன. குறுகிய சாலையில், அதிக வாகன போக்குவரத்தால், அப்பகுதி முழுதும் சேறு சகதியாக மாறியுள்ளது. அரிசிபாளையம் பகுதி குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலை என்பதால், உடனே சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை செய்து முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement