dinamalar telegram
Advertisement

4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: கடத்த முயன்ற 2 பேருக்கு காப்பு

Share
ஓமலூர்: ஓமலூர், தீவட்டிப்பட்டி அடுத்த பண்ணப்பட்டி சாலையோரம், நேற்று மதியம், கர்நாடகாவுக்கு கடத்த ரேஷன் அரிசியுடன், 'டாடா ஏஸ்' வேன் நின்றிருப்பதாக, சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது, வேனில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 4.5 டன்னில், 90 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன், அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்த முயன்ற பூசாரிப்பட்டி குபேந்திரன், 30, டிரைவர் முரளி, 25, ஆகியோரை, கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement