dinamalar telegram
Advertisement

தாலியை கழற்றி வைத்துவிட்டு குழந்தையுடன் மாயமான தாய்

Share
பெ.நா.பாளையம்: ஏத்தாப்பூர், முத்து நகரை சேர்ந்தவர், சேட்டு, 27. கூலித்தொழிலாளியான இவர், நேற்று, ஏத்தாப்பூர் போலீசில் அளித்த புகார் மனு: சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர், கலைவாணி, 24. இவரும், நானும் காதலித்து, ஐந்து ஆண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டோம். 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 20ல், எங்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அன்று, வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது, படுக்கை அறையில், மனைவியின் தாலி இருந்தது. ஆனால், 3 பவுன் நகை, குழந்தையுடன், அவர் மாயமாகிவிட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்த தமிழரசனுடன் சென்றிருக்கலாம். மனைவி, குழந்தையை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். போலீசார், குழந்தையுடன் மாயமான தாயை தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement