dinamalar telegram
Advertisement

பெகாஸிஸ் அச்சுறுத்தல்; கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஏஞ்சலா திட்டம்

Share
பெர்லின்: இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம் உருவாக்கிய சைபர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு செயலி பெகாஸிஸ்.

இந்த செயலிமூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை இஸ்ரேல் அரசு கவனித்து வந்தது. துவக்கத்தில் நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த செயலி தற்போது சிலர் சுயநலத்துக்காக தீய செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என முன்னதாக சர்வதேச அளவில் பத்திரிக்கையாளர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனை அடுத்து இந்த செயலில் யார் யாரது கைபேசிகளை கவனிக்கிறது என்று இந்திய அரசு உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் ஆராயத் துவங்கின. தனிநபர் தகவல்களை இந்த செயலி மூலம் சில ஹேக்கர்கள் திருடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தற்போது இது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஜெர்மனி நாட்டின் சைபர் பாதுகாப்பு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் ஜெர்மானியர்கள் தகவல்களை இது போன்ற செயலிகள் திருடுவதை அல்லது கண்காணிப்பது தனது அரசு அனுமதிக்காது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பெகாஸிஸ் உள்ளிட்ட செயலிகளுக்கு ஜெர்மானிய அரசு கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்களில் இருந்து தப்பிக்க குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    அதிபர்களின் போனே ஒட்டுகேட்கப்படுகின்றது. இந்த லட்சணத்தில் எப்படி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும் ?

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    சீனா வைரஸ் மூலமாக உலக நாடுகளை அச்சுறுத்தியது என்றால், இப்பொழுது இந்த இஸ்ரேல், கண்காணிப்பு செயலி பெகாஸிஸ் மூலம் மற்றநாடுகளை அச்சுறுத்துகிறது. இந்த இஸ்ரேல் செயலியால், இந்தியாவில் இப்பொழுது எதிர்க்கட்சிகள் பல ஆளும் கட்சியினரிடம் போர் தொடுக்கிறது. அடுத்து எந்த நாடு என்ன கண்டுபிடித்து, என்ன கலவரம் அல்லது தீய செயல் செய்யபோகிறதோ...?? ஆகமொத்தத்தில் மூன்றாம் உலக போருக்கு மறைமுகமாக ஒரு சில நாடுகள் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது.

Advertisement