dinamalar telegram
Advertisement

வீட்டை கிரயம் செய்ய மறுப்பு; தீக்குளிக்க வாலிபர் முயற்சி

Share
மல்லூர்: மல்லூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 26. இவர் மீது, 2020ல், அ.தி.மு.க., ஒன்றிய மகளிரணி தலைவர் சாந்தாவை கொலை செய்த வழக்கு உள்ளது. சந்தியூர் ஆட்டையாம்பட்டியில், தன் குடும்பத்துக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் ஒரு பகுதியில், ரமேஷ் வசிக்கிறார். மற்றொரு பகுதியை, அவரது பெரியப்பா வாடகைக்கு விட்டுள்ளார். குடியிருக்கும் வீட்டை, தனக்கு கிரயம் செய்து தரும்படி, பெரியப்பாவிடம் கேட்டு வந்தார். நேற்று முன்தினம் சென்னை சென்ற ரமேஷ், வீட்டை கிரயம் செய்து தர மறுப்பதாக, தலைமை செயலகம் முன் தீக்குளிக்க முயன்றார். அங்குள்ள போலீசார் தடுத்துள்ளார். இதுகுறித்து, மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை சென்ற மல்லூர் போலீசார், ரமே?ஷ அழைத்து வந்தனர். நேற்று, டி.எஸ்.பி., தையல்நாயகி, மல்லூர் போலீசார் ஸ்டேஷனில் வைத்து, அவரிடம் விசாரித்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என, அறிவுறுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement