dinamalar telegram
Advertisement

திருடர்களாக நினைத்து 2 பேருக்கு தர்ம அடி

Share
தலைவாசல்: தலைவாசல், வடகுமரையில் உள்ள சுடுகாட்டில், 10 பேர் கும்பல், நேற்று சூதாட்டத்தில் ஈடுபட்டது. தலைவாசல் போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். சிலர் தப்பி ஓட முயன்று, அருகில் உள்ள விளைநிலத்தில் பைக்கை ஓட்டினர். சோளம், காய் செடிகள் வீணாக, அதை பார்த்த மக்கள், மாடு திருடர்கள் ஊருக்குள் புகுந்ததாக எண்ணி, இருவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அப்போது, 'திருடர்கள் இல்லை. விளையாட்டால் ஏற்பட்ட பிரச்னையால் தப்பி ஓடுகிறோம்' என்றனர். பின், இதில் காயமடைந்த திட்டக்குடியை சேர்ந்த மணி, 62, தியாகு, 30, ஆகியோரை, ஆம்புலன்ஸ் மூலம், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், இருசக்கர வாகனங்கள் ஐந்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மணிவிழுந்தான் கிருஷ்ணமூர்த்தி, 41, முல்லைவாடி மணி, 45, ஆகியோரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement