dinamalar telegram
Advertisement

திருமணம் செய்து ஏமாற்றும் போலீஸ்காரர்: பெண் புகார்

Share
சங்ககிரி: திருமணம் செய்துகொண்டு, வீட்டுக்கு அழைத்துச்செல்லாமல் ஏமாற்றுவதாக, போலீஸ்காரர் மீது, பெண் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, மகுடஞ்சாவடி, மேட்டுமிஷின் பகுதியை சேர்ந்த சத்யா, 29, நேற்று முன்தினம், சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு: இரும்பாலை, கீரைபாப்பம்பாடியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 29. கோவை, 4ம் பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவர், என்னை காதலித்தார். 2020 ஆக., 24ல், மகுடஞ்சாவடியில் உள்ள என் வீட்டுக்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகினார். பின், திருமணம் செய்து கொள்ள கேட்டதும், அதே ஆண்டு அக்., 23ல், மருதமலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். சதீஷ்குமார், அவரது தங்கைக்கு திருமணம் ஆன பின், என்னை வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக கூறினார். பின், கடந்த மார்ச்சில், அவரது தங்கைக்கு திருமணமாகியும், என்னை அழைத்துச்செல்லாமல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறார். உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்ததால், ஜூன், 23ல், சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இருவரும் ஆஜரானபோது, ஜூலை, 1 வரை அவகாசம் கேட்டார். ஆனால், அன்று இரவு, 'என் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், போலீசில் புகார் கொடுத்தால் உன்னுடன் வாழ்ந்திடுவேனா? இப்படியே தொந்தரவு செய்தால் கொல்லாமல் விடமாட்டேன்' என மிரட்டல் விடுத்தார். மேலும், ஊர்காரர்கள் முன்னிலையில், என்னை அசிங்கமாக பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். அவர் புகார்படி, சதீஷ்குமார் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement