dinamalar telegram
Advertisement

ரூ.1,000 கிடைக்கும் நம்பிக்கையில் 3,600 பேர் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம்

Share
மேட்டூர்: மாதம், 1,000 ரூபாய் அரசு நிதி உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 3,600 பேர் ரேஷன் கார்டுகளில் இருந்த குடும்ப தலைவரின் பெயரை மாற்றம் செய்துள்ளனர்.
மேட்டூர் தாலுகாவில், 115 பகுதி நேர கடைகள் உள்பட, 187 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 1.33 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். தற்போதைய தி.மு.க., அரசு, தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவித்தது. இதனால், குடும்ப தலைவர் பெயரில் ரேஷன்கார்டு இருந்தால் தங்களுக்கு உதவி தொகை கிடைக்காது என பெண்கள் கருதுகின்றனர். உதவி தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தமிழகத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தவர்கள் கூட, தனி குடும்பமாக பிரிந்து, தனி ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அதுபோன்று, ரேஷன் கார்டுகளில் இருந்த குடும்ப தலைவரின் பெயரை மாற்றி, குடும்ப தலைவி பெயரை போடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேட்டூர் தாலுகாவில், மூன்று மாதங்களில், 3,600 பேர், குடும்ப தலைவர் பெயரை மாற்றியுள்ளனர். அதேபோல், மேட்டூர் தாலுகாவில் கூட்டு குடும்பமாக இருந்த, 3,500 குடும்பத்தினர், தங்களுக்கு தனி ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து, இதுவரை, 2,500 பேருக்கு புது கார்டு வழங்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement