dinamalar telegram
Advertisement

நோயாளிக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு?

Share
சேலம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தில், டீன் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், பெரிய வனவாசி, ஆயதாசனூரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 42. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்ததாரராக இருந்தார். அவரது கணவர் வெங்கடாசலம், 56, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: சேலம் அரசு மருத்துவமனையில், கடந்தாண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்கப்பட்டது. கடந்த, 24ல் நடப்பாண்டு ஒப்பந்தத்துக்கு, முறையான ஆவணங்கள் தாக்கல் செய்து, மிக குறைந்த விலையை குறிப்பிட்டிருந்தோம். அதிக விலை குறிப்பிட்ட நபருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது.இதுகுறித்து டீனிடம் கேட்டபோது, கன்னங்குறிச்சி செந்தில்முருகன் குறைந்த விலை குறிப்பிட்டதால் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தவறான தகவல் கூறி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இது, ஒப்பந்த விதிக்கு முரணானது. உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ள டீன் மீது நடவடிக்கை தேவை. மறு ஒப்பந்தம் நடத்த வேண்டும். தமிழக அரசுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். டீன் வள்ளி கூறுகையில், ''மகேஸ்வரி தரப்பில் முறையான ஆவணங்கள் இல்லை. கடந்த முறை அவர் மீது புகார்கள் வந்ததால் ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டோம்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement