Load Image
dinamalar telegram
Advertisement

முன்னாள் படை வீரர் குடும்பம் சார்ந்தோர் சான்று பெற அழைப்பு

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 2021 - 22க்கான கல்வியாண்டில், முன்னாள் படைவீரர் குடும்பத்தை சார்ந்தோர், அதற்கான 'சார்ந்தோர்' சான்றுக்கு விண்ணப்பிக்க நேரில் வர தேவையில்லை. https://esmwel.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, exwelslm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் சமர்ப்பிக்காதபட்சத்திலும், சார்ந்தோர் சான்று பெறலாம். தகவலுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலத்தை அணுகலாம். 0427 - 2902903 என்ற எண்ணிலும் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பிரபாகர் கூறுகையில், ''முன்னாள் படை வீரர் குடும்பத்தை சேர்ந்தவருக்கு மருத்துவம் படிக்க, 10 சீட், பி.டி.எஸ்., ஒரு சீட், பொறியியல் படிப்பில், 150 சீட் ஒதுக்கப்பட்டுள்ளதால், தகுதி உடையவர் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement