dinamalar telegram
Advertisement

தேங்காய் சிரட்டை அகற்றம்; டெங்கு தடுப்பு பணி தீவிரம்

Share
சேலம்: சேலத்தில் சில நாளாக மழை பெய்து வரும் சூழலில், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இவற்றில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், அவற்றை உடனே அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சாலையோரங்களில் பொது இடங்களில் வீசப்பட்டுள்ள, மழைநீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில், துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், வீடுகள், வணிக நிறுவனங்களில், மழைநீர் தேங்காதபடி சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க, மாநகராட்சி பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement