dinamalar telegram
Advertisement

ரூ.70 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுமானப்பணி தொடக்கம்

Share
வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றியம், ராக்கிப்பட்டி, கரட்டு புறம்போக்கு நிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி, 60 லட்சம் ரூபாய், ஒன்றிய நிதி, 10.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணிக்கு, கடந்த ஜூனில், முதல்வர் உத்தரவு வழங்கினார். ஆனால், கட்டுமானப்பணி தொடங்காமல், சமுதாய நலக்கூடத்தை, செங்கோடம்பாளைம் சென்றாய பெருமாள் கோவில் அருகே இடமாற்ற சிலர் முயற்சிப்பதாக, மக்கள், கலெக்டர் கார்மேகத்திடம், கடந்த, 16ல் புகார் அளித்தனர். நேற்று வீரபாண்டி பி.டி.ஓ.,க்கள் ராஜகணேசன், ரேவதி ஆகியோர், முதல்வர் அறிவித்த இடத்திலேயே சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போட்டு தொடங்கிவைத்தனர். முதல்கட்டமாக செடி, கொடி புதர்களை அகற்றி நிலத்தை சமன்படுத்தும் பணி, நேற்று, பொக்லைன் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement