dinamalar telegram
Advertisement

கூடுதல் வருமானத்துக்கு ஆலோசனை

Share
ஓமலூர்: காடையாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: காடையாம்பட்டி வட்டாரத்தில், 2,000 ஹெக்டேரில் கடலை பயிரிடப்பட்டுள்ளது. அதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற பேரூட்டம் தவிர்த்து, கால்சியம், கந்தகம், போரான் சத்துகளும் அவசியமானது. இதுபோன்ற சத்து குறைபாடுகளை களைய, இறவை பாசன பயிருக்கு, 40 முதல், 45 நாளிலும், மானாவாரி பயிருக்கு, 45 முதல் 75 நாளிலும், ஜிப்சம் ஒரு ஹெக்டேருக்கு, 400 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும். நிலக்கடலையில் டி.ஏ.பி., 2.5 கிலோ, அமோனியம் சல்பேட், 1 கிலோ, போராக்ஸ் அரை கிலோவை, 37 லிட்டர் தண்ணீரில் கலந்து, இரவு முழுதும் வைத்திருந்து, மறுநாள் இந்த கலவையை வடிகட்டி, 468 தண்ணீரில் கலந்து, 25 மற்றும் 35 நாளில், இந்த ஊட்டச்சத்து கலவையை தெளித்து, பருப்பில் வளர்ச்சி குறைபாட்டை நீக்கி அதிக வருமானம் பெறலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement