dinamalar telegram
Advertisement

தார்ச்சாலை அமைக்கும் பணி: மாவட்ட வன அலுவலர் ஆய்வு

Share
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி, செங்கட்டு முதல், மண்மலை வரதராஜ பெருமாள் கோவில் வரை, மண் சாலை செல்கிறது. அப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள், இச்சாலையை தார்ச்சாலையாக அமைத்துத்தர, கடந்த ஜூனில், கலெக்டர், மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர். நேற்று, மாவட்ட வன அலுவலர் முருகன், உதவி வனப்பாதுகாவலர் முருகன், தம்மம்பட்டி வனச்சரகர் அசோக்குமார், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது, 'சாலை அமைப்பது குறித்து அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்' என, வனத்துறையினர் உறுதியளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement