dinamalar telegram
Advertisement

14 மணி நேரம் கூட கிடைக்காத மின்சாரம்: விவசாய பணி செய்ய முடியாமல் பரிதவிப்பு

Share
ஈரோடு: தடையின்றி, 14 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைக்காததால், பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.
இதுபற்றி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் கூறியதாவது: தமிழக அரசு கடந்த ஏப்., 1 முதல், விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கலில் இருந்த கட்டுப்பாடு முறையை நீக்கியது. அ.தி.மு.க., ஆட்சியில் பகலில், 6 மணி நேரம், இரவு, 8 மணி நேரம் என, 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினர். இந்த நேர மின் வழங்கல், விவசாயிகளுக்கு இடையூறாக உள்ளதாக, அரசுக்கு கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்றத்தில் விவசாயத்துக்கு கட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி வழக்கு தாக்கலானது. இதற்கிடையில் விவசாயத்துக்கு, 24 மணி நேரம் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. தற்போது, 14 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. தற்போது பயிர் செய்யும் காலமாக உள்ளதால், விதைப்பு, நடவு பணிகள் மும்முனை மின்சாரம் கிடைக்காமல் பாதிக்கிறது. மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. அரசு பரிசீலனை செய்து கட்டுப்பாடற்ற, 24 மணி நேரம் தடையின்றி கிடைக்கும் வகையில், மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement