dinamalar telegram
Advertisement

குள்ளங்கரடு மக்கள் குடிநீரின்றி அவதி

Share
புன்செய்புளியம்பட்டி: சத்தி நகராட்சியில் ஏற்பட்டுள்ள, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட குள்ளங்கரடு பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 3,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்கள். இப்பகுதியில் குடிநீர் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பபகுதி மக்கள், குடிநீருக்காக காலிக்குடங்களுடன் தோட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement