dinamalar telegram
Advertisement

சாலையை ஆக்கிரமிப்பதால் ஆபத்து

Share
கோபி: கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள், சத்தி - ஈரோடு சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில், வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வரும் கார், வேன், சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி கொள்கின்றனர். இதனால், ஈரோடு மற்றும் சத்தி சாலையை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வட்டார போக்குவரத்து துறையினர், நடவடிக்கை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement