dinamalar telegram
Advertisement

அறிவியல் ஆயிரம்

Share
அறிவியல் ஆயிரம்
பறக்கும் பைக்

மணிக்கு 483 கி.மீ., வேகத்தில் செல்லும் பறக்கும் 'பைக்' போன்ற வாகனத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் விலை ரூ. 2.83 கோடி. விலை மேலும் அதிகரிக்கலாம் என இதன் சி.இ.ஓ., டேவிட் மேய்மான் தெரிவித்துள்ளார். இது அதிகபட்சம் 15 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும். இது டீசல் அல்லது மண்ணெண்ணெய்யில் இயங்கும். இதில் இரண்டு பேர் பயணம் செய்யலாம். தேவைப்படும் போது பைலட் இதன் வேகத்தை அதிகரிக்கலாம் குறைக்கலாம். எளிதாக நீக்கும் வகையில் சிறிய இறக்கைகள் உள்ளன.

தகவல் சுரங்கம்
பெரிய அணை

உ.பி.,யில் சோன்பத்ரா மாவட்டத்தில் 'ரிஹண்ட் அணை' உள்ளது. இது கோவிந்த் பல்லப் பன்ட் சாகர் அணை எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பெரிய செயற்கை ஏரி என அழைக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு அடிப்படையில் இந்தியாவின் பெரிய அணையாக உள்ளது. இதன் கொள்ளளவு 1060 கோடி கன மீட்டர். 1962ல் திறக்கப்பட்டது. அணையின் நீளம் 3066 அடி. உயரம் 300 அடி. நீர்பிடிப்பு பரப்பளவு 13,333 சதுர கி.மீ., இதன் கட்டுமானப்பணி 1954ல் தொடங்கி 1962ல் நிறைவடைந்தது. இங்கு 6 யூனிட் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement