dinamalar telegram
Advertisement

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

Share
அம்மாபேட்டை: அந்தியூர் அருகே நகலூரை சேர்ந்தவர் குப்புசாமி, 43: இவர் பூதப்பாடி, வாய்க்கால் பாலம் அருகில் உள்ள, செங்கல்சூளையில் வேலை கேட்க நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் குப்புசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக கூறி, அவரிடம் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போன், 1,000 ரூபாயை வழிப்பறி செய்து தப்பினார். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் குப்புசாமி கொடுத்த புகார்படி, போலீசார் விசாரித்ததில் வழிப்பறி செய்தது பூதப்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 24, என்பதும், அவரை அப்பகுதி மக்கள் உதவியுடன், போலீசார் பிடித்ததும் தெரியவந்தது. கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement