dinamalar telegram
Advertisement

ரயிலில் இருந்து விழுந்த கட்டட தொழிலாளி பலி

Share
ஈரோடு: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த, கட்டட தொழிலாளி பலியானார். ஈரோடு - தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் இடையே, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. ரயில்வே போலீசார், விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளி வன்னியர் வீதியை சேர்ந்த ராஜா, 51, என்றும், இவர் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கடந்த, 19ல் திருப்பூரில் இருந்து தர்மபுரி செல்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்ததும், ஈரோடு அருகே வந்தபோது, படிக்கட்டில் பயணித்தபோது தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement