dinamalar telegram
Advertisement

சிறுமிக்கு பாலியல் சில்மிஷம்: பாக்சோவில் முதியவர் கைது

Share
பவானி: ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். 62: இவர், சைக்கிளில் சென்று அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில், டீ விற்பனை செய்பவர். இந்நிலையில் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமியை, தனியாக அழைத்து சென்ற தேவராஜ், பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதை பார்த்த அப்பகுதியினர் அவரை பிடிக்க சென்ற போது தப்பிவிட்டார். சிறுமியின் பெற்றோர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தேவராஜை நேற்று கைது செய்து, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement