dinamalar telegram
Advertisement

புத்தக திருவிழா ரத்து; சொற்பொழிவு நடத்த முடிவு

Share
ஈரோடு: ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடத்தப்படும், புத்தக திருவிழா ஜூலை, 30 முதல் ஆக., 10 வரை நடத்துவதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் இன்னும் முற்றுப்பெறவில்லை. மேலும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. 600 பதிப்பக ஊழியர்களை ஒரே மண்டபத்திலும், விடுதியிலும் வழக்கமாக தங்க வைப்பதுபோல, இன்றைய சூழலில் தங்க வைக்க இயலாது. கூட்டம் கூடுவதும் நல்லதல்ல. மக்கள் நலன் கருதி இந்தாண்டு புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூலை, 30 முதல், ஆக., 10 வரை திருவிழாவில் நடக்க வேண்டிய, மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படும். இதுபற்றிய விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இத்தகவலை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement