dinamalar telegram
Advertisement

சிவன்கோவில் ஆக்கிரமிப்பு: புகார் இடத்தில் தாசில்தார் ஆய்வு

Share
பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம், சிவன் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி, தாசில்தார், இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம், ஈரோடு வடக்கு மாவட்ட, பா.ஜ., இளைஞரணி பொதுச் செயலாளர் சசிதயாள் மனு அளித்தார்.அதன்படி நேற்று பெருந்துறை தாசில்தார் கார்த்திக், இன்ஸ்பெக்டர் தங்கம், பெருந்துறை ஆர்.ஐ., ரமேஷ், சீனாபுரம் வி.ஏ.ஓ., ரத்தினசாமி ஆகியோர், சிவன் கோவில் இடத்தை நேரில் வந்து பார்வையிட்டனர். நாளை (23) தலைமை சர்வேயரை கொண்டு, கோவில் நிலத்தை அளந்து, அத்து காட்டி தருவதோடு, அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றி தர நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement