dinamalar telegram
Advertisement

ஈரோடு மாவட்டத்தில் 10,700 பேருக்கு தடுப்பூசி

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5.10 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்ட அளவில் சுழற்சி முறையிலும், ஓட்டுச்சாவடி வாரியாகவும் தடுப்பூசி போடுகின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை, இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது. இருப்பினும் ஒரு மையத்தில், 100 முதல், 150 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதால், கூட்டம் குறைந்தபாடில்லை. நேற்று, 107 இடங்களில், 10 ஆயிரத்து, 700 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று மாநகரில், 20 இடம் உட்பட அனைத்து இடங்களிலும் தலா, 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement