dinamalar telegram
Advertisement

கோபியில் கடை வாரியாக சென்று சளிமாதிரி பரிசோதனை தீவிரம்

Share
கோபி: கோபி நகரில், கடை வாரியாக சென்று சுகாதார பிரிவினர் சளிமாதிரி பரிசோதனை மேற்கொள்கின்றனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோபி நகராட்சி சுகாதார பிரிவை சேர்ந்த லேப்-டெக்னீசியன், பரப்புரையாளர், கொசு ஒழிப்பு பணியாளர் மற்றும் கண்காணிப்பாளர் அடங்கிய குழுவினர், பொதுமக்களுக்கு தினமும் சளிமாதிரி பரிசோதனை செய்து வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதன்படி, நேற்று வீதி வாரியாக, கடை, கடையாக அணுகி, விருப்பமுள்ளவர்களுக்கு சளிமாதிரி பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா தலைதூக்கிய சமயத்தில், 400 பேருக்கு சளிமாதிரி பரிசோதனை செய்தால், தினமும் சராசரியாக, 50 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர் பரிசோதனையால், தற்போது கோபியில் தொற்று எண்ணிக்கை தினமும் சராசரியாக, நான்கு பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர் மழையால், வரும் நாட்களில் தொற்று பாதிப்பு, அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள், முககவசம், சமூகவிலகலை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement