dinamalar telegram
Advertisement

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

Share
ஈரோடு: பக்ரீத் பண்டிகையையொட்டி, பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தியாக திருநாளான பக்ரீத், நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பொது இடங்களில் நடைபெறும். இந்தாண்டு கொரோனா காரணமாக, பொது இடங்களில் சிறப்பு தொழுகை நடத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்த, பள்ளிவாசல்களில் சமூக இடைவெளி விட்டு சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்டத்தில் உள்ள. 102 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. 12 இடங்களில் ஆடு வெட்டப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வ.உ.சி., பூங்காவில் உள்ள, ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement