dinamalar telegram
Advertisement

பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் ரெடி

Share
கோபி: கொரோனா ஊரடங்கு தளர்வால், நீண்ட இழுபறிக்கு பின், கோபி பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. கோபி பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ் ரேக் பகுதியில், இருபாலரும் இலவசமாக சிறுநீர் கழிக்க, தனித்தனியே கழிப்பிடம் உள்ளது. கழிப்பிடத்தை ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில், மேம்படுத்தும் பணியை பல மாதங்களுக்கு முன் நகராட்சி துவக்கியது. அதன்பின், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவால் பணி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வை முன்னிட்டு, கடந்த, 5 முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், திட்டப்பணி முடிந்து, நேற்று முதல் இருபாலருக்கான கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்ததால், பஸ் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement