dinamalar telegram
Advertisement

வட்டார போக்குவரத்து துறைரூ.4.21 லட்சம் வசூலிப்பு

Share
கோபி: கடந்த ஐந்து மாதத்தில், 352 வாகனங்களை தணிக்கை செய்ததில், 4.21 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. கோபி - ஈரோடு சாலையில், ஒத்தக்குதிரை வரை, பெருந்துறை சாலையில் சிறுவலூர் வரை, சத்தி சாலையில் மாக்கினாங்கோம்பை வரை, டி.என்.,பாளையம் சாலையில், அரக்கன்கோட்டை வரை, அத்தாணி சாலையில், எஸ்.கணபதிபாளையம் வரை, கோபி வட்டார போக்குவரத்துதுறை எல்லையாக உள்ளது. இங்கு ஆர்.டி.ஓ., மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழுவினர், கடந்த ஜன.,1 முதல், மே.,31 வரை காப்பு சான்று, புகை சான்று மற்றும் பிற குற்றங்கள் என மொத்தம், 1,817 வாகனங்களை தணிக்கை செய்துள்ளனர். அவற்றில், 352 வாகன உரிமையாளருக்கு தணிக்கை அறிக்கை வழங்கி, 4.21 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement