dinamalar telegram
Advertisement

பாதுகாப்பு துறையினர் போராட்டம் நடத்த தடை செய்யும் மசோதா தாக்கல்

Share
புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே இன்று அத்தியாவசிய பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் வேலை நிறுத்தம், போராட்டம் நடத்த தடை விதிக்கும் புதிய மசோதாவை பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் அறிமுகப்படுத்தினார்.

இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தொழில்துறை. ராணுவ தளவாட வழங்கலில் தன்னாட்சி, பொறுப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அத்தகைய தொழிற்சாலைகளை நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனம் அல்லது நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் அதனை ஒரு நிறுவனமாக்க அரசு முடிவு செய்தது.

இந்த முடிவுக்கு எதிராக, ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளன. ஜூலை 26 முதல் வேலை நிறுத்தம் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் தான் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா 2021 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை துறையில் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

மேலும் வேலை நிறுத்தம், போராட்டம் போன்றவற்றில் இத்துறையினர் ஈடுபட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். சட்டவிரோத வேலைநிறுத்தங்கள், அதைத் தூண்டுதல் மற்றும் அதற்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கவும் இம்மசோதா அதிகாரமளிக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • Ram - ottawa,கனடா

    அப்படியே டெல்லி சென்று அங்கிருக்கும் மக்களுக்கு இடையூறு செய்து போராட்டம் செய்வதை தடை செய்யவும் மசோதா வேண்டும்

  • ராஜ் - ,

    நல்லது போராட்டம்ங்கள் தான் நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது

  • Saai Sundharamurthy A.V.K -

    இந்துக்கள், இந்தியா கலாச்சாரத்தை கேவளப்படுத்தியும், இந்திய நாட்டை காட்டி கொடுக்கும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் தூண்டுதல் பேரில் நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். ஜெய் ஹிந்த் !!

  • RajanRajan - kerala,இந்தியா

    யூனியன் என்ற பெயரில் நடக்கும் தொழில் முடக்கத்தை குறிப்பாக பாதுகாப்பு துறையில் கட்டுப்படுத்துவது அவசியமான ஓன்று. அந்நிய கைக்கூலிகள் அரசு நிர்வாகத்தை முடக்கும் வகையில் யூனியன் வரை ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். அவர்களை வேரறுக்கும் மசோதா அங்கீகரிக்க பட வேண்டும்.

  • Sundar Anand - Chennai,இந்தியா

    Super Vande Matharam Jaihind

Advertisement