dinamalar telegram
Advertisement

சர்வேயர் தற்கொலை; பெண் டாக்டர் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை

Share
Tamil News
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, சர்வேயர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மனைவியான டாக்டர் உள்ளிட்ட 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்துாரை சேர்ந்தவர் திலீபன், 33. இவர் திருப்பத்துார் தாசில்தார் அலுவலகத்தில் சர்வேயராக (நில அளவையர்) பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த திவ்யா, 33, என்பவர் எம்.பி.பி.எஸ்., படித்து விட்டு, ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி பகுதியில் உள்ள அம்மா கிளினிக்கில் தற்காலிக டாக்டராக பணியாற்றி வந்தார். திலீபனும், திவ்யாவும் காதலித்து ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆடி மாதத்தையொட்டி திவ்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டிற்கு கடந்த 15ம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர்.

திலீபன் குடும்பத்தினர் 18ம் தேதி திவ்யாவை அழைத்து வர அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் ஆடி மாதம் முடிந்த பிறகு தான் அனுப்புவோம் என திவ்யாவின் குடும்பத்தினர் கூறிவிட்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. விரக்தியடைந்த திலீபன் நேற்று (ஜூலை 21) மாலை 5:00 மணிக்கு அவரது வீட்டில் உள்ள மேல் மாடியில் உள்ள அறையில் உள்ள மின் விசிறியில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், திலீபன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் தமிழ் தேவி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திலீபன் மனைவியான பெண் டாக்டர் திவ்யா, அவரது குடும்பத்தினர் என 10 பேரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement