dinamalar telegram
Advertisement

ஆட்சியாளர்கள் ஏழைகளா? ஐகோர்ட் கேள்வி

Share
சென்னை: மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகள் இல்லாமல் புது பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆட்சியாளர்கள் என்ன ஏழைகளா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினர்.


கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‛மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகளுடன் குறிப்பிட்ட பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசமான சாலைகளை மேம்படுத்திய பின், சட்டப்படியும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில், ஆஜரான வழக்கறிஞர், ‛மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்துகள் வாங்க ஒரு பேருந்துக்கு 58 லட்சம் ரூபாய் செலவாகும். நிதி பிரச்னை உள்ளதால் தற்போது 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியா ஏழை நாடு' என தெரிவித்தார்.

இதையடுத்து, ‛ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளையும் அமல்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தினர். கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  தேவையற்ற செலவு. மகளிர் போல அவர்களுக்கு தனி பேருந்துகள் விடலாம். நீதிமன்றம் யோசிக்கவேண்டும் என்றோ தினசரி ஒன்று அல்லது இரண்டு மாற்று திறனாளிகள் வருவதற்காக செலவு செய்வது வீண். தவிர மாற்று திறனாளிகள் பெரும்பாலும் மூன்று சக்கர வாஹங்களில்தான் போகிறார்கள். சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்கள் தேவையற்ற செலவுகளை செய்ய சொல்லி நீதிமன்றம் சொல்வது சரியல்ல

 • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

  பிச்சை யார் வாங்குவார்கள். ஏழைகள் தான் பிச்சை எடுப்பர். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் போட்ட பிச்சையில் தான் இன்றைய ஆட்சி நடப்பதாக பிச்சை போட்டவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆகவே ஆட்சியில் உள்ளவர்கள் ஏழைகள் தான் இதனை குறித்து கொள்ள வேண்டும்.

 • கணேசன் -

  நம் மாநிலம் ஏழை மாநிலம் தான் அதனால தான் கடன் வாங்குகின்றனர். ஆனால் நம் ஆட்சியாளர்கள் நீதிபதி கூறியது போல் வசதியானவர்கள் தான், அவர்கள் பணத்தை எடுத்து பயன்படுத்த உத்தரவிட முடியாதே. போக்குவரத்து மந்திரி நிர்வகிக்கும் அரசு துறை நஷ்டத்துல இயங்குகிறது ஆனால் அவரின் தனிப்பட்ட நிறுவனம் அபார வளர்ச்சியடைந்து லாபமீட்டுகிறது. அரசு துறைக்கு வரி இல்லை, பராமரிப்பும் இல்லை ஆனால் பல சலுகைகளும் திறமையான அதிகாரிகளும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் இருக்கின்றனர். பல துறைகளை அரசு நடத்துவதே ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்காக தான் மற்றபடி மக்கள் சேவைக்காக இல்லை.

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  கொரோனாவினால் இறந்து போன ஒரு நீதிபதியின் குடும்பத்துக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து 25 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். நீதிபதி என்ன ஏழையா?

 • RajanRajan - kerala,இந்தியா

  » ஆட்சியாளர்கள் ஏழைகளா? ஐகோர்ட் கேள்வி. ஆமாம் மைலார்ட். அவர்கள் எல்லோருமே லஞ்ச ஊழல் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் மைலார்ட்....தயை கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் மைலார்ட்

Advertisement